Header Ads

ஆஸ்ட்ரோ (ஜோதிட) ஆரோக்கிய கணிப்புகள் –ஆகஸ்ட் மாதம் ஐந்தாம்ம் வாரம்

ஆஸ்ட்ரோ (ஜோதிட) ஆரோக்கிய கணிப்புகள் –ஆகஸ்ட் மாதம் ஐந்தாம்ம் வாரம்
உங்கள் ராசிகுறிப்பு, ஆரோக்கியத்தைப் பற்றி ஆகஸ்ட் மாத  ஐந்தாம் வாரம்  என்ன சொல்கிறது?

. ரிஷபம் ஆரோக்கியத்தை பொறுத்த வரை, வைரல் தொற்றுகள் பற்றி இங்கே கவனமாக இருங்கள். நீங்கள் அசாதரண அறிகுறிகளை கவனித்தவுடனே, அந்த பிரச்சினை அதிகமாகமல் இருக்க உடனடியாக தடுப்பு நடவடிக்கியகள் எடுங்கள். நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்ற பழைய நோய்களால் நீங்கள் அவதிப் பட்டுக் கொண்டிருந்தால், எந்த சூழ்நிலையிலும் உங்கள் மருந்துகளை புறக்கணிக்காதீர்கள்.

மிதுனம் மூட்டுகளில் வலி, சீரற்ற ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற பழைய ஆரோக்கிய பிரச்சினை உள்ளவர்கள், மிகவும் கவனமாக இருப்பது இங்கே அவசியம். உங்களை பாதிக்கும் பிரச்சினைகளை திறம்பட கண்காணிக்க உங்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை தேவை. கணேஷா குப்பை உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து நிறைய பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட அறிவுறுத்துகிறார்.

கடகம் எதிர்பாராத விதமாக நோயில் விழும் அபாயம் இருப்பதாக கிரக நிலைகள் குறிக்கின்றன. இதன் காரணமாக, ஆரோக்கிய பிரச்சினை குறித்து மிகவும் கவனமாக இருக்கவும். செரிமான அமைப்பில் கோளாறு உங்கள் நாளை கெடுக்க கூடும். செரிமான அமைப்பை சரியாக வைத்துக் கொள்ளும் பொருட்டு, அமில உணவுகள், நிறைவுற்ற கொழுப்பு, பொரித்த உணவுகள், சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் , மது மற்றும் காஃபின், தவிர்க்க வேண்டும்.

சிம்மம். உங்கள் ராசி ஆட்சியாளர் சூரியன், அருகாமையில் ராகு மற்றும் சனியின் அம்சம் இருப்பதால் பாதிக்கப்பட்டுள்ளார். இது பொதுவாக உங்கள் நன்மைக்காக ஆபத்து உள்ளது என்று பொருள். வைரஸ் வகை தொற்று உங்கள் பீடிக்க கூடும். இதையொட்டி நீங்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு மேலாக படுக்கையில் இருக்கலாம். ஒரு சிறப்பு மருத்துவரை சீக்கிரத்தில்ச் நோயை குணப்படுத்த சரியான மருந்தை பரிந்துரைக்க ஆலோசியுங்கள்.

கன்னி உங்கள் ராசியின் மீது சனியின் செல்வாக்கு, மற்றும் அங்கேயுள்ள கிரகங்களின் இருப்பு நிலை, நீங்கள் ஆரோக்கியமாக இருக்க சாதகமாக இல்லை. இதன் காரணமாக, உங்கள் ஆரோக்கியத்தை பற்றி மிகவும் கவனமாக இருங்கள். பழைய நோய் பிரச்சினை உள்ளவர்கள், அதை திறம்பட பார்த்துக் கொள்ள வேண்டும். வயதாகிக் கொண்டிருப்பவர்கள், உங்களை உடல் நடவடிக்கைகளில் அதிகமாக சிரம அளித்துக் கொள்ளக் கூடாது.

துலாம் கிரக நிலைகள் இங்கே நீங்கள் ஆரோக்கியத்தின் உச்சியில் இருப்பீர்கள் என்று குறிக்கின்றன. எந்த கடுமையான ஆரோக்கிய பிரச்சினையும் நீங்கள் கவலைப்பட வராது.எனினும், பழைய நோயில் ஏற்கெனவே அவதிப்படுபவர்கள், மற்றும் ஆஸ்துமா அல்லது கீல்வாதம் போன்ற உறுதியான நோய்க்கு மருத்துவத்திற்கு புறக்கணிப்பு   செய்யாமல், மற்றும் அதே நேரத்தில் சில மாற்று சிகிச்சைகளுக்கு பார்க்க முயற்சி செய்ய வேண்டும்..

விருச்சிகம் நீங்கள் சுவாச அமைப்பு சம்மந்தமான பிரச்சினைகள் பெற்றால், ஒரு சிறப்பு மருத்துவரை உங்கள் அமைப்பை சரிபார்த்து பயனுள்ள மருந்து பரிந்துரைக்க ஆலோசியுங்கள். ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், ஒரு வழக்கமான சோதனையை பயனுள்ள கண்காணிப்பிற்காக செய்யுங்கள். காயமடையும் வாய்ப்புகள் இருப்பதால், வாகனத்தை ஓட்டும் போது கவனமாக இருங்கள்.

தனுசு இரக்கமுள்ள வியாழனின் சாதகமான அதிர்வு, நீண்ட நாட்களாக, உள்ள ஒரு ஆரோக்கிய பிரச்சினைக்கு நன்றாக வேலை செய்ய உள்ளன. இந்த வாரம் கிரகங்கள் சாதகமாக சீரமைக்கப்பட்டு நீங்கள் அனைத்து பிரச்சினைகளையும் வேரோடு களைய மாற்று மருந்து சரியான வகையான கண்டுபிடிக்க உதவும். எதிர்பாராத விதமாக காயமடையவும் வாய்ப்புள்ளது. எனவே உடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

மகரம் சிலருக்கு குணப்படுத்தியது போல் தோன்றிய சில ஆரோக்கிய பிரச்சினைகள் உங்களை முற்றுகையிட்டு திரும்பி வர மிகவும் வாய்ப்பு உள்ளது.நவீன மருந்துகளை விட, நீண்ட கால குணமடைய, இந்த பிரச்சினைக்கு சில மாற்று மருந்தை முயலுங்கள். மற்றவர்கள் நல்ல பொது ஆரோக்கியத்தை அனுபவிப்பர். எனினும், நல்ல ஆரோக்கியத்தை எளிதாக எடுத்துக் கொள்ளாமல், உடற்பயிற்சிகள் அல்லது உங்கள் வாழ்க்கை முறையை சீர்செய்தல் போன்றவற்ரை உங்கள் ஆரோக்கியத்தை உச்சத்தில் பராமரிக்க செய்யுங்கள்.

கும்பம் இந்த வாரம் சனியின் தாக்கம் சூரியன் மேல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை பற்றி நல்ல படத்தை காட்டவில்லை. நீங்கள் சில் வைரல் வகை தொற்றுக்கு பூச்சியாக விழுந்து ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரிடலாம். ஆரம்ப நிலையிலேயே நிலைமையை கட்டுபாட்டிற்குள் வைக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுங்கள். தவிர, செரிமான அமைப்பில் கோளாறு உங்களுக்கு கவலை ஏற்படுத்தலாம்.

மீனம் சில  ஆரோக்கிய பிரச்சினை இங்கே உங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனினும், நீங்கள் இரண்டொரு நாட்களில் குணமடைவீர்கள். இந்த சாத்தியத்தை பரிசீலித்து,ஆரோக்கியத்தை பற்றி கவனமாக இருக்கவும்.நீங்கள் சுவாச அமைப்பு தொடர்பான பிரச்சினையால் பாதிக்கப் பட்டால், ஒரு சிறப்பு மருத்துவரை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை கூற மற்றும் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க நாடவும். மற்றும் கணேஷா உங்களை சில போதை பொருளுக்கு அடிமையாயிருந்தால் விடுபடவும் அறிவுறுத்துகிறார்.

Read this in English

Translated by R.Prameela

Image source: Shutterstock

Disclaimer: TheHealthSite.com does not guarantee any specific results as a result of the procedures mentioned here and the results may vary from person to person. The topics in these pages including text, graphics, videos and other material contained on this website are for informational purposes only and not to be substituted for professional medical advice.

Previous Article

குழந்தைகளின் பசியை அதிகரிக்க் 3 யோகா ஆசனங்கள்.

Next Article

பொடுகினால சோர்வா? நீங்கள் இந்த தேயிலை ம்ர எண்ணை – பெப்பர்மின்ட் எண்ணையை டி.ஐ.வை சிகிச்சையில் முயலுங்கள்.
Powered by Blogger.